"தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருப்பதாக சொல்லவில்லை" பாகிஸ்தான் அரசு மறுப்பு
நிழல்உலக தாதா தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதை ஒப்புக் கொண்டதாக வெளியான தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
பிரான்ஸ் நிதி கண்காணிப்பு அமைப்பான FATF பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் வைத்து நிரந்தரமாக நிதி உதவி பெற தடை விதிக்கக் கூடும் என்ற அச்சம் எழுந்த நிலையில், 88 தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்வதாக பாகிஸ்தான் பட்டியலிட்டது.
இந்த பட்டியலில் தாவூத் இப்ராகிமின் பெயரும் இடம் பெற்றதால், கராச்சியில் தாவூத் இருப்பதை அந்நாடு ஒப்புக் கொண்டதாக தகவல் வெளியானது. தாவூதின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த செய்தி தவறு என்றும் திசை திருப்பும் முயற்சி என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா.சபையால் தடை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளின் பட்டியல் அடிப்படையில்தான் பாகிஸ்தான் பிரான்ஸ் நிதி அமைப்புக்கு பட்டியல் அனுப்பியிருப்பதாகவும், அதில் தாவூத் பாகிஸ்தானில் இருப்பதாக குறிப்பிடவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments